வினோதமான வழக்கு: குழந்தைக்கு பெயர் சூட்டிய நீதிமன்றம்! கேரளாவில் நெகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


குடும்பப் பிரச்சனை, விவாகரத்து வழக்கு காரணமாக மகளுக்கு பெயர் வைப்பதில் தாய், தந்தை இடையே ஏற்பட்ட தகராறை தீர்த்து வைத்த கேரளா உயர் நீதிமன்றம் குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளது. 

கேரளா, ஆலுவா பகுதியைச் சேர்ந்த தம்பதி குடும்பப் பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதற்காக விவாகரத்து செய்ய முயன்றனர். 

இவர்களுக்கு மகள் உள்ளார். மகளை பராமரித்து வரும் தாய் பெயர் வைக்க முடியாமல் போனது. மேலும் குழந்தையின் தாய், தந்தை இருவரும் வெவ்வேறு பெயர்களை தெரிவித்து வந்ததால் மேலும் பிரச்சனை அதிகரித்தது. 

குழந்தைக்கு பெயர் சூட்டாமல் பிறப்புச் சான்றிதழ் பெற முடியாத நிலையில் பெயர் வைக்காமல் பள்ளியிலும் சேர்க்க முடியவில்லை. 

இதனால் மகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு கணவன் உத்தரவிடுமாறு கேரளா உயர் நீதிமன்றத்தில் குழந்தையின் தாய் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி தாய், தந்தை இருவருக்கும் இடையேயான தகராறை தீர்த்து வைத்து பின்னர் குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு தாமதமாகும் என்பதால் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதி, தந்தை தெரிவித்த பெயரையும் தாய் தெரிவித்த பெயரையும் சேர்த்து புண்யா பி. நாயர் என பெயர் சூட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala court named child


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->