கேரளா || கவர்னரின் ஒப்புதலை இழந்த நிதி அமைச்சர்.! பதவியில் இருந்து நீக்க கவர்னர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் கவர்னர் ஆரிப் முகமதுகானுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. அரசு நிர்வாகத்தில் கவர்னர் தலையிடுவது மற்றும்  பல்கலைக்கழக நியமன விவகாரங்களில் தலையிடுவது போன்ற நடவடிக்கைகள் மாநில அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் கேரளாவில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், விளக்கம் கேட்டும் கவர்னர் ஆரிப் முகமது கான் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினார். 

கவர்னரின் இந்த திடீர் உத்தரவு கேரள அரசை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கும் மாநில அரசுக்கும் இடையே ஏற்கனவே மோதல் ஏற்பட்ட நிலையில், கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க அரசுக்கு அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கான் வலியுறுத்தியுள்ளார். 

தமது ஒப்புதலை நிதி அமைச்சர் பாலகோபால் இழந்துவிட்டதாக கூறி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு கேரளாவை புரிந்துகொள்ள முடியாது என்று அமைச்சர் பாலகோபால் பேசியுள்ளார்.

அமைச்சரை பதவி நீக்கக் கோரிய ஆளுநரின்  நடவடிக்கையால் அவருக்கும் மாநில அரசுக்கும் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கவர்னரை திரும்ப பெற ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala finance minister remove position governor order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->