சபரிமலையில் வி.ஐ.பி. தரிசனம் என்ற ஒன்றே கிடையாது - கேரளா உயர்நீதிமன்றம் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவிலில் தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதனால், சமீபத்தில் சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை நடத்துவதாக என்ஹான்ஸ் ஏவியேசன் என்ற தனியார் நிறுவனம் இணையதளத்தில் விளம்பரம் ஒன்று செய்திருந்தது.

அதில், ரூ.48 ஆயிரம் கட்டணத்துடன். சன்னிதானத்தில் வி.ஐ.பி. தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஏனென்றால், சபரிமலையில் இதுவரை வி.ஐ.பி. தரிசனம் என்ற ஒன்றே கிடையாது. இதனால், கோவில் நிர்வாகம் மறைமுகமாக வி.ஐ.பி. தரிசனத்தை கொண்டு வருகிறதோ என்ற சந்தேகம் பக்தர்களுக்கு உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. 

இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மற்றும் கோவில் தேவஸ்தானதிற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. அதை தொடர்ந்து தனியார் நிறுவனம் இணையதளத்தில் இருந்து விளம்பரத்தை நீக்கியதுடன் அதற்காக மன்னிப்பும் கோரியது. 

மேலும், இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனில்.கே.நரேந்திரன், பி.ஜி.அஜித்குமார் உள்ளிட்டோர் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள்  பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:-

"சபரிமலை, நிலக்கல்லில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொடர்ச்சியான சேவைக்கு பயன்படுத்தக்கூடாது. 

இதனை சபரிமலையில், மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் பயன்படுத்த வேண்டுமென்றால் முன் அனுமதி பெற வேண்டும். இந்த பகுதி கேரள காவல்துறை சட்டத்தின் படி பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

இது பெரியார் புலிகள் சரணாலயத்தில் இருந்து சுமார் 800 மீட்டர் தூரத்தில் உள்ளதால், இந்த பகுதி சீசன் இல்லாத நாட்களில் வன விலங்குகளின் வாழ்விடமாகவும் உள்ளது. 

இதுவரை இந்தப் பகுதியில் 12 முறை மட்டுமே ஹெலிகாப்டர்கள் தரையிறங்கி உள்ளது. அதுமட்டுமல்லாமல், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் அனைவரும் சாதாரண பக்தர்கள் தான்.

இவர்களில் யாருக்கும் சிறப்பு சலுகை அளிக்கக் கூடாது. சபரிமலையில்  வி.ஐ.பி. தரிசன முறை இல்லை என்ற நடைமுறையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்" என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala high court order to sabarimala temple administration for vip dharisanam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->