புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களின் கவனத்திற்கு; பொங்கலுக்கு சர்ப்ரைஸ்..!
Attention to new ration card applicants
புதிய ரேஷன் விண்ணப்பித்தவர்களுக்கு எப்போது புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த ஜூன் மாதம் முன்பாக விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. ஜூன் மாதத்துக்கு முன்பாக விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும், அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் மட்டுமே புதிய ரேஷன் கார்டு விநியோகம் நடக்கிறது. இதில்கூட ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு இன்னும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 20ம் தேதிக்கு பிறகு புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்திருந்தால், அந்த விண்ணப்பங்களும் பரிசீலனையில் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விரைவில் பரிசு விநியோகமும் துவங்கப்படும். இதுபோக, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பங்களும் குவிந்து வருவதாக சொல்லப்படுகிறது.
புதிய ரேஷன் கார்டுகள் அனைவருக்குமே கிடைக்க, 6 மாதங்களுக்கு வாய்ப்பில்லை என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. புது ரேஷன் விநியோகித்தாலும், ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு சற்று தாமதமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இப்படியான புதிய ரேஷன் கார்டுகள் குறித்த பல்வேறு சலசலப்புகளும், வதந்திகளும், என மாறி மாறி செய்திகள் இணையத்தில் வந்துகொண்டிருக்கிறது..
இந்நிலையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். பழனியில், ரூ.5.80 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசும்போது, "தமிழகத்தில் இதுவரை 17 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

44 மாதங்களில் 2500 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு புதிதாக முழுநேரம், பகுதிநேர ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டது. 2 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் 20.70 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர்" என்றும் அவர் கூறினார்.
இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கப் பணம் குறித்த அதிகார அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனால் கடந்த வாரம் உணவு பொருள் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருவதாகவும், பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இலவச வேட்டி, சேலைகளையும், ஜனவரி 10ம் தேதிக்குள் விநியோகிக்க ரேஷன் கடைகளுக்கு கைத்தறித் துறை அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரிசு தொகுப்புடனே பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகளையும் அரசு வழங்கப்போவதாக செய்திகள் வெளிவருகின்றன.
ஆனால், ரேஷன் கடைகளுக்கு கைத்தறி துறை, இலவச வேட்டி சேலைக்கான அறிவுரையை வழங்கியிருப்பதாக கூறப்படுவது, இது பொது மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ரேஷன்தார்களிடம் ஏற்படுத்தி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது..
English Summary
Attention to new ration card applicants