திருமணமான பெண்ணுடன் பாலுறவு குற்றமில்லை.. உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து.! - Seithipunal
Seithipunal


 

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பெண் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்தார். திருமணமான அந்த பெண் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தனது ஆண் நண்பர் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். 

சம்பந்தப்பட்ட நபர் திருமணம் செய்து கொள்வதாக கூறி உடலுறவு கொண்டதாக அவரது மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கை கேரளா உயர்நீதிமன்றம் விசாரித்தபோது, "இருவரும் மனம் ஒத்து தான் பாலுறவு கொண்டுள்ளீர்கள் இது இந்திய தண்டனைச் சட்டம் 376ன் படி பாலியல் பலாத்கார குற்றம் இல்லை. 

திருமணமான பெண்ணும், வேறொரு ஆணும் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதும் அதன்பின் அவர்கள் கொடுத்த வாக்கை மீறுவது பாலியல் குற்ற வழக்கில் வராது. அந்த நபர் ஏமாற்றும் மன பாங்கில் இதை செய்து இருந்தால் தான் அது பாலியல் குற்ற வழக்காகும். 

மனுதாரர் திருமணமானவர். ஏற்கனவே, திருமணம் ஆகியும் விரும்பிய நபருடன் விருப்பத்தின் பேரில் தான் உடலுறவு வைத்துள்ளார். சட்டபூர்வமாக திருமண பந்தத்தில் இணைய வாய்ப்பில்லை என்பது தெரிந்து சம்மதத்துடன் தான் அவர் பாலுறவு வைத்துள்ளார். எனவே, இதை பாலியல் குற்ற வழக்காக பார்க்க முடியாது." என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala highcourt about illegal affair issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->