டீ கடையில் வெடித்து சிதறிய LPG கியாஸ்... தொழிலாளி கதி என்ன? கேரளாவில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் டீக்கடையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா, கோழிக்கோட்டில் இன்று காலை 7 மணி அளவில் டீக்கடையை திறந்து அடுப்பை பற்ற வைத்த போது திடீரென எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. 

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் விரைந்து அணைக்க முயன்றனர். 

இருப்பினும் இந்த வெடி விபத்தில் சாலையின் குறுக்கே இருந்த கலையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமாகியது. இந்த தீ விபத்தில் டீ கடை முழுவதும் எரிந்து நாசமாகியது. 

மேலும் இந்த விபத்தில் டீக்கடையில் பணியாற்றிய தொழிலாளி காயமடைந்த நிலையில் மீட்க பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கடையில் இருந்த மற்றொரு தொழிலாளி எந்த ஒரு காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

எதிர்பாராத விதமாக டீக்கடையில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் காயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala LPG gas exploded  tea shop


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->