குடும்பத்திற்கு ஒரு துப்பாக்கி கொடுங்க! தமிழக அரசின் சட்ட ஒழுங்கு சிக்கலை கிழித்தெடுத்த அனிதா சம்பத்!
Anitha Sampath Bahujan Samaj Party Amstrong Law And Order
வட சென்னையில் இன்றைக்கு இருக்கும் சட்ட ஒழுங்கின் நிலை பதற்றத்தை வரவழைக்கிறது என்று, நடிகையும், செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று இரவு அவரின் வீடு அருகேயே படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த 8 மாதங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் என்பவரின் தம்பி புன்னை பாலா உள்ளிட்ட எட்டு பேர் இந்த கொலையை செய்ததாக சரணடைந்துள்ளார்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர், அதுவும் ஒரு தலித் தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பது, தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு மீதான கேள்வியை எழுப்ப்பியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சஷ்டி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகையும், செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத் இந்த கொலை சமத்துவம் குறித்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
அதில், சென்னையை பார்த்தாலே அச்சமாக உள்ளது. நான் பெரம்பூரில் பிறந்து வளர்ந்தவள், ஆம்ஸ்ட்ராங் சார் கொலை அதிர்ச்சி அளிக்கிறது. சென்னை பதற்றமாக இருப்பதை உணர்கிறேன்.
ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கே இந்த நிலை என்றால்? எங்களை போன்ற சாதாரண மக்களின் நிலை என்ன? வீட்டுக்கு ஒரு துப்பாக்கி கொடுத்து விடுங்கள். எங்கள் உயிரை நாங்களே பாதுகாத்துக் கொள்கிறோம்.
சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகளாக இருப்பார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அண்மையில் வெளியான மகாராஜா படத்தில் ஒரு குப்பைத் தொட்டியை திருடிய வழக்கில், தான்தான் குப்பை தொட்டியை திருடினேன் என்று பல ஆட்களை தொடர்புகொண்டு போலீசாக நடித்த நட்டி நடராஜன் அழைப்பு விடுப்பார். அப்படி இருக்க இப்படியான ஒரு கொலையை ஏற்கனவே பிளான் செய்து தான் செய்திருப்பார்கள்.
இதற்குப் பின்னால் பெரும் தலைகள் இருக்க வாய்ப்புள்ளது. கொலை நடந்த பிறகு நாங்கள் தான் கொலை செய்தோம் என்று தாங்களாகவே இந்த எட்டு பேர் ஏன் சரணடைந்திருக்கக் கூடாது என்ற கேள்வியும் எழுகிறது.
சென்னையில் பாதுகாப்பின்றி உணர்கிறேன். Swiggy, Zomato ஊழியர் போன்று உடை அணைந்து வந்து படுகொலை செய்துள்ளனர், இனி எப்படி Swiggy , Zomato ஊழியர்களை கண்டால் நம்ப முடியும்.
உளவுத்துறை எச்சரித்தும் காவல்துறை அலட்சியமாக இருந்ததால் ஒரு கட்சியின் மாநில தலைவருக்கு இந்த நிலைமை அப்போ மக்களுக்கு என்ன பாதுகாப்பு?
ஒரு தேசிய கட்சியின் தலைவர், எச்சரிக்கையாக இருப்பவர், அவருக்கே இந்த நிலை என்றால், தனியாக வசிக்க கூடிய பெண்களின் பாதுகாப்பை என்னவென்று சொல்வது? இனி கொலைகளையும் சாதாரணமாக கடந்து சென்றுவிடும் நிலை வந்துவிடுமோ என்று பயமா இருக்கு" என்று அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்.
English Summary
Anitha Sampath Bahujan Samaj Party Amstrong Law And Order