விடுதி கட்டடத்தின் 7வது மாடியில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை! மன அழுத்தம் காரணமா? - Seithipunal
Seithipunal


கேரளா, நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி படித்து வந்த மாணவர் ஒருவர் விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வடக்கு கேரளா, நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்த மாணவர் யோகேஷ்வர் நாத், இன்று அதிகாலை 5.30 மணி அளவில் விடுதி கட்டடத்தின் 7வது மாடியில் இருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து அறிந்த சக மாணவர்கள் உடனடியாக யோகேஸ்வரனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மாணவர் தற்கொலை செய்வதற்கு முன்பு வீட்டிற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். என்ஐடி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala NIT student committed suicide 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->