அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள கனடாவின் புதிய பிரதமர்..!
Canada new Prime Minister has warned US President Trump
கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக மாற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அந்நாட்டின் மீது வரிச் சுமைகளை ஏற்படுத்தி வருவதற்காக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பிறகு கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, ''கனடா ஒருபோதும் எந்த வகையிலும், வடிவத்திலும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்காது'' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 07ஆம் தேடி தனது பதவியை விட்டு விலகினார். இதனைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடா நாட்டின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் வரிவிதிப்பு நிலைப்பாடு குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நாங்கள் தயாரிக்கும் பொருட்கள், நாங்கள் விற்கும் பொருட்கள் மற்றும் எங்கள் வாழ்வாதாரத்தின் மீது டொனால்ட ட்ரம்ப் நியாயமற்ற வரிகளை விதித்துள்ளார்.

அவர் கனேடிய குடும்பங்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களைத் தாக்குகிறார். ஆனால், நாங்கள் அவரை வெற்றி பெற அனுமதிக்க முடியாது. நாங்கள் இந்தப் போராட்டத்தைத் தொடங்கவில்லை, ஆனால் கனேடியர்களை யாராவது தொந்தரவு செய்தால், அந்த நபரை சும்மா விடமாட்டார்கள்.
அமெரிக்கர்கள் நமது வளங்கள், நமது நீர், நமது நிலம், நமது நாட்டை விரும்புகிறார்கள். சற்று யோசித்துப் பாருங்கள். அவர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் நம் வாழ்க்கை முறையையே அழித்துவிடுவார்கள். கனடா ஒருபோதும் எந்த வகையிலும், வடிவத்திலும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்காது” என்று புதிய கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Canada new Prime Minister has warned US President Trump