எடையை குறைப்பதற்காக 06 மாதங்களாக எதுவும் சாப்பிடாத இளம்பெண் பலி; கேரளாவில் சோகம்..! - Seithipunal
Seithipunal


உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, பல மாதங்களாக உணவு எதையும் சாப்பிடாமல் இருந்து வந்த 24 வயதுடைய இளம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தில் உள்ள கூத்து பரம்பா என்ற பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநந்தா, 'அனோரெக்ஸியா' என்ற உணவுக் கோளாறு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர் . இந்த அனோரெக்ஸியா' என்ற உணவுக் கோளாறால் பாதிக்கப்படுவோர், எடை குறைவாக இருந்தாலும், எடை அதிகரிக்கும் என்ற தீவிர பயத்தால், உணவு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பர் என்று மருத்துவ தரப்பில் கூறப்படுகிறது.

இந்த 'அனோரெக்ஸியா' பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீநந்தா, கடந்த ஆறு மாதங்களாக உணவு எதையும் சாப்பிடவில்லை என்றும், சமூக ஊடகமான, 'யு டியூப்'பை பார்த்து உணவு கட்டுப்பாட்டு முறையை பின்பற்றி வந்த அவர், வெறும் வெந்நீர் மட்டுமே குடித்து வந்ததாக பெற்றோர் கூறியுள்ளனர். 

இந்நிலையில், அவர் உடல் மெலிந்த நிலையில் மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனால், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனைக்கு, சில மாதங்களுக்கு முன், ஸ்ரீநந்தாவை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

குறித்த இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள், நன்றாக சாப்பிடும்படியும், மனநல ஆலோசனை பெற்றுக் கொள்ளும்படியும்  அறிவுறுத்தியுள்ளனர். எனினும், ஸ்ரீநந்தா தொடர்ந்தும் உணவு எதையும் சாப்பிடவில்லை. இதனால், கடந்த இரு வாரங்களுக்கு முன், ஸ்ரீநந்தாவின் சர்க்கரை அளவு குறைந்து, சுவாசப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தலசேரி கூட்டுறவு மருத்துவமனையில் அவரை மீண்டும் பெற்றோர் சேர்த்துள்ளனர்.

இந்நிலை, அவரது உடல் எடை, 24 கிலோவுக்கும் குறைவாகவே இருந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீநந்தா, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தமை அவரது பெற்றோர்களை சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young woman in Kerala died after not eating anything for 6 months to lose weight


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->