பள்ளி பெண் ஆசிரியர்களையும் வேஷ்ட்டி, சட்டை போட சொல்லுங்க முதல்வரே., அதுவும் பாலின வேறுபாட்டை அழிக்கும்.!  - Seithipunal
Seithipunal


ஆண் பெண் என்ற பாலின பேதத்தை ஒழிப்பதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில், ஆண் -பெண் என்ற பாலின பேதம் இன்றி ஒரே மாதிரியான சீருடை அணியும் வழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, கோழிக்கோட்டில் இயங்கிவரும் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவ- மாணவியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை அணியும் பழக்கத்தை அமல்படுத்தி உள்ளனர். அந்த பள்ளியின் உத்தரவின்பேரில் அந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் 200 பேர், மாணவர்கள் அணிவது போல் மேல் சட்டையும் அரைக்கால் (பேண்ட்) சட்டையும் சீருடையாக அணிந்து கொண்டு பள்ளிக்கு வந்தனர்.

இதற்க்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இஸ்லாமிய மாணவர்கள் கூட்டமைப்பு உட்பட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பெண்களின் ஆடை சுதந்திரத்தில் தலையிடுவதாக இந்த இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தின்போது கண்டன கோஷம் எழுப்பி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் கேரளா முதல்வர் எந்த கருதும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது பல கருத்துக்களுக்கு வித்திட்டுள்ளது. கேரள மாநிலத்தில் ஆண் -பெண் பாலின வேறுபாட்டை ஒழிப்பதற்காக பள்ளி மாணவிகளுக்கு. மாணவர்கள் போலவே சீருடை அமல்படுத்தப்பட்டது போலவே, ஆண், பெண் பாலின சமத்துவத்தை கொண்டு வரும் விதமாக பள்ளியில் பாடம் எடுக்கும் ஆண் ஆசிரியர்கள் போலவே பெண் ஆசிரியர்களுக்கும் வேஷ்டி-சட்டை, பேண்ட்-ஷார்ட், டி-ஷார்ட் அணிய சொல்லி கேரளா முதல்வர் உத்தரவிட வேண்டும் வேண்டும் சமூக வலைத்தளங்களில் கேரளா நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

ஆயிரம் சீருடைகள் அணிந்தாலும் இயற்கையாக படைக்கப்பட்ட மனித உடலில் ஆண் - பெண் என்ற பாலினத்தை அழிக்க முடியாது. எதற்காக சீருடை மூலம் பாலின வேறுபாட்டை ஒழிப்பதாக பள்ளி நிர்வாகங்கள் முன்னெடுத்துள்ளது என்று பலருக்கும் சந்தேகமாக உள்ளது. 

எப்படி இது சாத்தியமாகும்? அந்த பள்ளியில் பாடம் நடத்தக்கூடிய ஆசிரியைகள் ஆண்கள் போலவே வேஷ்டி - சட்டை, பேண்ட்-சட்டை அணிந்து வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆடை சுதந்திரத்தில் தலையிட மாட்டேன் என்று தெரிவித்த கேரள அரசுதான்., ஒரு மாணவி இந்த ஆடை தான் அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? அவரவர் மத, சமுதாய விருப்பத்துக்கு ஏற்றவாறு ஆடை அணிவதில் என்ன பிரச்சனை? ஒருவரின் தனிப்பட்ட மத, சமுதாய எண்ணத்தில் தலையிட்டு நீ இந்த ஆடை தான் அணியவேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

என்ன வார்த்தை இது "பாலின வேறுபாடு இல்லாமல் சீருடை" ஆண் -பெண் இரு பாலின வேறுபாடு தானே? 

ஆடைதான் உங்களுக்கு பிரச்னை என்றால்., இயற்கை படைத்தபோது நம் மனித உடல், ஆடை இல்லாமல் இருந்ததுபோல் இருக்கலாமே., புரட்சி செய்பவர்கள் இப்படி செய்யுங்களேன்., அப்பவும் ஆண் -பெண் பாலின வேறுபாடு தெரியுமே., இப்படியாக சமூகவலைத்தளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KERALA SCHOOL UNIFORM ISSUE NOW


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->