காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்ட திருநங்கை - திருநம்பி ஜோடி.. !
Kerala trans couple getting married Valentine Day
காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்ட திருநங்கை ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டப்பட்டது மொழி, மத பேதமின்றி காதலர் தினத்தை கொண்டாடிய நிலையில், கேரளாவில் திருநர்கள் திருமணம் செய்துகொண்டனர். கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்டவர் திருநம்பி மனு கார்த்திகா இவருக்கு சியாமா பிரபா (31) என்ற திருநங்கையுடன் காதல் ஏற்ப்பட்டது.
சியாமா பிரபா கேரள அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டுப் பிரிவில் திட்ட அதிகாரியாக உள்ளார். அதே போல மனு கார்த்திகா அங்குள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக உள்ளார்.
கடந்த 10 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் காதலர் தினமான நேற்று திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தில் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதனை அடுத்து இந்த திருமணத்தை திருநங்கை, திருநம்பி என்னும் அடையாளத்துடனேயே பதிவு செய்ய இருப்பதாகவும் அதற்காக காவல்நிலையத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Kerala trans couple getting married Valentine Day