கேரள நிலச்சரிவு: 181 பேர் பலி! 73 உடல்களின் கொடூர நிலை! கேரள அரசு கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!
Kerala Vayanadu Land Slide Kerala Govt Report
கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, மண்ணில் புதையுண்டு இதுவரை 181 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 225 பேரை காணவில்லை என்றும் கேரள மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நிலச்சரிவில் சிக்கி புதை உண்ட 191 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 181 பேரில் 91 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 73 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இதில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால், பல உடல்கள் சிதைந்து காணப்படுவதால், அவர்களை யார் என்று அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கேரள மாநில அரசு தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
English Summary
Kerala Vayanadu Land Slide Kerala Govt Report