வைரஸ் காய்ச்சல்.. திடீரென உயிரிழந்த இளைஞர்.. அதிர்ச்சித் தகவல் கொடுத்த சுகாதாரத்துறை.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் இளைஞர் ஒருவர் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த நிலையில் அவருக்கு குரங்கம்மை நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் பரிசோதனைக்கான மாதிரிகள் அனுப்பப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் கொடுத்துள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகம் பகுதியில் இருந்து கேரள மாநிலத்தை சேர்ந்த திருச்சூர் பகுதிக்கு வந்த இளைஞருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.பின், சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்த நிலையில் அவரது உடலில் சில குரங்கம்மை அறிகுறிகள் காணப்பட்டதால் அவர் குரங்கம்மை நோயால் உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகப்பட நேரிட்டது. 

ஆனால், அவரது உடலில் குரங்கம்மை நோய்க்கான தழும்புகள் எதுவும் இல்லை. இதனை தொடர்ந்து, அவரது உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அத்துடன் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி இறந்த இளைஞரின் உடல் எரிக்கப்பட்டது. 

கேரளாவில் ஏற்கனவே இரண்டு பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த நோய் பரவும் திறன் கொண்டிருக்க வில்லை என்று பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala young men died By Virus Fever and Then these death makes doubt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->