கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலையை மூடி மறைக்க முயற்சி - மம்தா அரசை கிழித்தெடுத்த உச்சநீதிமன்றம்!  - Seithipunal
Seithipunal


கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட வழக்கு, இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. 

அப்போது நீதிபதிகள் மேற்குவங்க மாநில அரசு, மத்திய அரசுக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதன் விவரம் பின்வருமாறு:

இந்த வழக்கை தானா முன்வந்து எடுத்தது என்பது பாலியல் கொலைக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் கருத்தில் கொள்ள தான்.

நாடு முழுவதும் பணிபுரியும் பெண் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு குறித்து நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.

பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லாதது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கிறோம்.

ஆண் மற்றும் பெண் மருத்துவர்களுக்கான தனி ஓய்வு, பணி அறை மற்றும் பாதுகாப்பான பணி சூழல் தொடர்பாக நிலையான நெறிமுறைகளை தேசிய அளவில் ஒருமித்த நடைமுறையை நாம் உருவாக்க வேண்டும்.

நெறிமுறைகள் வெறும் காகித அளவில் இருக்க முடியாது. பெண்கள் தங்கள் பணியிடங்களில் பாதுகாப்பாக இருக்க முடியாவிட்டால் அரசியலமைப்பின் கீழ் சமத்துவம் என்பதற்கான அர்த்தம் என்ன?

கொல்கத்தா நிகழ்வை பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், புகைப்படம், வீடியோ உள்ளிட்டவை வெளியிடுவது மிகவும் கவலை அடைய வைத்துள்ளது.

இதுபோன்ற விவகாரத்தில் பாதிக்கப்பட்டவரின் புகைப்படத்தை வெளியிடக்கூடாது என உத்தரவு இருந்தும் புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.

படுகொலை சம்பவத்தை மருத்துவமனை நிர்வாகம், உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் என மூடி மறைப்பதற்கு பார்த்துள்ளது?

நள்ளிரவு வரை FIR பதியப்படவில்லை? அதன் பின் FIRல் கொலை என பதியப்படவில்லை? இந்த சம்பவத்தை உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் என மருத்துவமனை இயக்குனர் கடந்து போக முற்பட்டார்? மருத்துவமனை இயக்குனர் எப்போது இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார்? என்று நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kolkatta Doctor Hacked to death case SC


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->