விமான நிலையத்தில் கசிந்த வாயு.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த ஊழியர்கள்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal



கோலாலம்பூர், பன்னாட்டு விமான நிலையத்தில் விமான பொறியியல் பணியகத்தில் வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 39 ஊழியர்கள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பயணிகள் முனையத்தில் இருந்து தனித்து இருக்கும் விமான பொறியியல் பணியகத்தில் பணியாற்றி வந்த வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. 

வாயு கசிவு ஏற்பட்டதால் ஊழியர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் 17 பேர் விமான நிலையத்தில் உள்ள அவசர சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வாயு கசிவால் பயணிகள் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. 

இந்நிலையில் நீர்ம பெட்ரோலிய வாயுவில் சேர்க்கப்படும் மெத்தில் மெர்காப்டன் என்ற வாயு உபயோகிக்கப்படாத கலனில் இருந்து கசிந்ததாக கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kuala Lumpur airport Leaked gas employees fainted 


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->