தேவை இன்றி வெளியே வர வேண்டாம்! அடுத்த 3 நாட்களுக்கு மக்களுக்கு முதலமைச்சர் விடுத்த எச்சரிக்கை!
Maharashtra heavy rain flood warning chief minister
மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மகராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையில் இன்று 6 மணி நேரத்தில் 300 மில்லி மீட்டர் மழை பெய்தது.
இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, சாலை வழி போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன.
மேலும் இந்த கனமழை காரணமாக மும்பை மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் புறநகர் ரயில் சேவைகள், விமான சேவைகள் இந்த கனமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளநீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தற்போது வரை 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கனமழை குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டார். மேலும் மழை வெள்ள பாதிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை அடுத்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பொதுமக்களுக்கு ஒரு முக்கிய செய்தி ஒன்றையும் தெரிவித்துள்ளார்.
அதில் அடுத்த மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று முன் எச்சரித்துள்ளார்.
மேலும் கடற்கரை அருகில் பொதுமக்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
மழை வெள்ளநீர் தேங்கியுள்ள பகுதிகளில் அதனை அப்புறப்படுத்துவதற்கு போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
English Summary
Maharashtra heavy rain flood warning chief minister