முடி உதிர்வை குறைக்கும் வெந்தய எண்ணெய் - எப்படி செய்வது?
how to make vendhayam oil
தலை முதல் உடலில் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவது வெந்தயம். இதனை வைத்து எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
அரை கப் வெந்தயத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் போடவும். இதில், உங்களுக்கு விருப்பமான எண்ணெயை ஊற்றி வெந்தயத்தை மூழ்கடித்து அதன் மீது ஒன்றரை அங்குலம் எண்ணெய் இருக்க வேண்டும்.
பின்னர் பாட்டிலின் மூடியை இறுக்கமாக வைத்து குறைந்தது நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை வைத்திருக்கவும். வெந்தயம் மற்றும் எண்ணெய் கலக்க ஒரு நாளைக்கு ஒரு முறை பாட்டிலை குலுக்கி வைக்க வேண்டும்.

ஆறு வாரங்களுக்குப் பிறகு பருத்தி துணி அல்லது வடிகட்டியை பயன்படுத்தி இந்த எண்ணெயை வடிகட்டவும். எண்ணெயின் நிறம் சற்று மாறி இருக்கும்.
வடிகட்டிய எண்ணெயை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து குறைந்தது ஒரு மாதமாவது பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை குறைந்தது இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
English Summary
how to make vendhayam oil