இந்தியாவின் பிரதமர் ஆகணுமா? அப்ப மனைவி இருக்கனும்! ராகுலை கலாய்த்த லாலு! - Seithipunal
Seithipunal


வருங்காலத்தில் யார் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றாலும், அவருக்கு மனைவி இல்லாமல் இருக்க கூடாது என்று, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊழல் வழக்கில் குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ், தற்போது டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அங்கேயே முகமிட்டுள்ளார்.

மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு உண்டான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

பீகாரில் கடந்த மாதம் நடைபெற்ற 17 எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட லாலு பிரசாத் யாதவ், ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கி இருந்தார்.

இந்த நிலையில், வருங்காலத்தில் நாட்டின் பிரதமராக வரக்கூடியவர் மனைவி இல்லாமல் இருக்கக் கூடாது என்றும், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமரின் மனைவி இல்லாமல் பிரதமர் மட்டும் தங்கியிருப்பது தவறு என்றும், இந்த முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த கருத்து எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவராக கருதப்படும் ராகுல் காந்தியை மறைமுகமாக சாடுவதாக உள்ளதாகவும், வற்புறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lalu Advise to Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->