நிலம் அளித்தால் சுங்கவரியில் பங்கு - மத்திய அரசின் அதிரடி திட்டம்! - Seithipunal
Seithipunal


புறவழிச்சாலைகள், சுங்கச்சாவடிகளுக்கு நிலம் அளிக்கும் விவசாயிகளுக்கு, வசூலிக்கப்படும் சுங்கவரிகளில் பங்கு அளிக்க மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யவும், புறவழிச்சாலைகள் அமைக்கவும், அதிவிரைவு சாலைகள் அமைக்கவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அரசால் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. 

இப்படியாக அமைக்கப்படும் சாலைகளுக்கு சுங்கச்சாவடிகளை அமைத்து, அதில் சுங்கவரி வசூல் செய்ய தனியார் அல்லது அரசு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உரிமை வழங்கி வருகிறது.

மேலும், சாலைகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் விலை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. போதுமான தொகை, வாழ்வாதாரம் இழப்பு உள்ளிட்ட பலகாரங்களால் நிலம் கொடுத்தவர்களின் நிலைமை மோசமாகி வருகிறது.

இந்த நிலையில், நிலம் அளிப்பவர்களுக்கு அரசு நிர்ணயித்த தொகையுடன், வசூலிக்கப்படும் சுங்கவரியிலும் ஒரு குறிப்பிட்ட பங்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியால் யோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் விவசாயிகள் நலனுக்காக இதனை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Land Toll Share scheme


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->