மக்களே மறந்துடாதீங்க.. ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாளாகும்.

ஆதார் அட்டை என்பது இந்திய குடிமகனின் ஒவ்வொரு அடையாள அட்டையாக கருதப்படுகிறது. அதன் காரணமாக ஆதார் கார்டை பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

அந்த வகையில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க பல மாதங்களாக கால அவகாசம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் பலர் இணைக்காமலேயே உள்ளனர்.

இந்த நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜூன் 30-ம் தேதி) முடிவடைகிறது. இதனை பொதுமக்கள் விரைந்து ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டை இணைக்காதவர்களுக்கு ஜூலை 1 முதல் அரிசி, சர்க்கரை மற்றும் கோதுமை போன்ற எந்த ஒரு பொருளும் வழங்கப்டாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Last day of ration card link adhar card


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->