போக்சோவில் "சிறார்கள் வயது" குறைப்பு? அறிக்கையில் வெளியான பகிர் தகவல்!
Law commission recommend do not reduce minors age in POSCO Act
கடந்த 2012 ஆம் ஆண்டு 18 வயதுக்குட்பட்ட சிறார்களை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க போக்கோ சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் வருவதற்கு முன்பு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்ட பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன் பிறகு 18 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகளும் பாலியல் வித்தியாசமின்றி இந்த சட்டத்தின் கீழ் வருவார்கள் என்பதால் ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் இந்த சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டது.
மேலும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தாக்குதல், துன்புறுத்தல், ஆபாசம் படம் எடுப்பதல் போன்றவையும் இந்த சட்டத்தின் கீழ் குற்றங்களாக சேர்க்கப்பட்டது. இதற்கிடையே போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான அறிக்கையை மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின்படி பாலியல் உறவுக்கு சம்மதிக்கும் வயதை மாற்றுவது இன்றைய காலகட்டத்திற்கு உகந்தது அல்ல என அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் 18 வயதை குறைப்பது குழந்தை திருமணம் மற்றும் குழந்தை கடத்தலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் வயதை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என பரிந்துரை செய்துள்ளது.
மேலும் இளம் பருவ காதலை கட்டுப்படுத்த முடியாது என்பதால் உள்நோக்கம் இல்லாத வழக்குகளில் நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மத்திய சட்ட ஆணையம் இது போன்ற வழக்குகளில் நிலைமையை சரி செய்யும் விதமாக சட்ட திருத்தம் மேற்கொள்ளுவது அவசியம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Law commission recommend do not reduce minors age in POSCO Act