மோர்பி பாலம் விபத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாட மாட்டோம் - வழக்கறிஞர்கள் அமைப்பு - Seithipunal
Seithipunal


குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன் மறுசீரமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த தொங்குபாலம் திடீரென அறுந்து விழுந்தது. 

இந்த கோர விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உட்பட 135 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் குஜராத்தைச் சேர்ந்த ஓரேவா நிறுவனம் பாதுகாப்பு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அதன் உயர்மட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் கைது செய்யப்பட9 பேர் சார்பாக ஆஜராகப் போவதில்லை என்று குஜராத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது. நேற்று காலை மோர்பி மற்றும் ராஜ்கோட் பார் அசோசியேஷன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தில் பாலம் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேருக்கு ஆதரவாக யாரும் வாதாடக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lawyers associations decide not to represent accused in Morbi bridge collapse case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->