பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்! மருத்துவர்கள் இல்லாததால் பிரசவம் பார்த்த எம்.எல்.ஏ! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்துகொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிற்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வெங்கட்ராவ் பிரசவம் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் தும்முகுடேம் மண்டலம்,டபிள்யூ ரெகுபள்ளி சேர்ந்தவர் ஸ்வப்னா பகுதிக்கு அருகில் உள்ள பத்ராச்சலம் அரசு மருத்துவமனையில் பிரசவதித்திற்காக சேர்ந்துள்ளார். அங்குள்ள பிரசவ வார்டில் இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படுகிறது.

நேற்று திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு வலியில் துடித்துள்ளார். மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் யாரும் இல்லை. இரவு நேரம் என்பதால் செவிலியர்களும் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பிரசவ வலிகள்எ அப்பெண் கதறி துடித்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இது குறித்து தெள்ளம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வெங்கட்ராவுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து பத்ராச்சலம் அரசு மருத்துவமனை விரைந்து வந்த சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வெங்கட்ராவ் கர்ப்பிணிப் பெண்ணை பரிசோதனை செய்தார்.

அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே பிரசவம் பார்க்க முடியும் என்பதை அறிந்து கொண்ட அவர் அவரது உறவினர்களிடம் இது குறித்து எடுத்து தெரிவித்துள்ளார். அவர்களும் புரிந்து கொண்டு அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதனை அடுத்து தெள்ளம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வெங்கட்ராவ் அப்பெண்ணுக்கு அதே மருத்துமனையிலே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்து பிரசவம் பார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அறுவை சிகிச்சை மூலம் வெற்றிக்கரமாக பிரசவம் பார்த்த சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ரவுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நன்று தெரிவித்து வருகின்றனர். அப்பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Legislator Dr Venkata Rao delivered the pregnant woman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->