திருப்பதியில் மது பாட்டில்களை ரோடு ரோலர் மூலம் அழிப்பு!
Liquor bottles destroyed by road roller in Tirupati
திருப்பதியில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து சாலையில் வைத்து ரோடு ரோலர் மூலம் அழித்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதியில் கள்ளத்தனமாக விற்பனை செய்து பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் வெளி மாநிலங்களில் இருந்து திருப்பதி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் விசாரணை முடிந்து திருப்பதி பாலாஜி காலனி போலீஸ் குடியிருப்பு வழக்கத்தில் உள்ள சாலையில் மது பாட்டில்களை சாலையில் அடுக்கி வைத்து ரோல் ரோலர் மூலம் அழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது.
மது பாட்டில்களை அழிக்கும் ரோல் ரோலரை கொடி அசைத்து தொடங்கி வைத்தார் போலீஸ் சூப்பிரண்ட் சுப்பராயுடு. பின்னர் ரோல் ரோலர் மது பாட்டில்களின் மீது ஏறி நசுக்கி வைத்த சம்பவம் நடைபெற்றது.
இந்த நிலையில் திருப்பதி மாவட்டத்திற்கு யாரேனும் மது பாட்டில்களை கடத்தி வந்தாலோ அல்லது சட்டவிரோதமாக விற்பனை செய்தாலோ அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் நேரடியாக காவல் நிலையம் சென்று புகார் அளிக்கலாம் என்று காவல்துறை வலியுறுத்தி உள்ளது.
கடந்த மே மாதம் தேர்தலின் போது 300 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 27568 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள 27 ஆயிரத்து 568 மது பாட்டில்களையும் ரோலர் மூலம் போலீசார் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Liquor bottles destroyed by road roller in Tirupati