சேர்ந்து வாழ்வதை திருமணமாக அங்கீகரிக்க முடியாது - கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கேரளாவை சேர்ந்த ஒரு ஹிந்து கிறிஸ்தவ ஜோடி கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். அதற்காக அந்த ஜோடி ஒரு ஒப்பந்தத்தையும் பதிவு செய்துள்ளனர். அந்த தம்பதிக்கு தற்போது 16 பிள்ளை உள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து வாழ விரும்பாத அந்த தம்பதி விவாகரத்து கோரி ஒரு குடும்ப நல நீதிமன்றத்தை நாடினர். இதில் திருமண சட்டத்தின் படி திருமணம் நடைபெறவில்லை என்று கூறி அந்த தம்பதியின் மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 அதனை எதிர்த்து அவர்கள் கேரளா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சேர்ந்து வாழ்வதை இன்னும் திருமணம் சட்டமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும் தனிநபர் சட்டம் அல்லது சிறப்பு திருமண சட்டம் போன்ற மதசார்பற்ற சட்டத்தின்படி நடைபெற்ற திருமணத்தை தான் சட்டம் அங்கீகரிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து வாழ முடிவெடுத்த ஒரு ஜோடி அதை திருமணம் என்று கூறவும் அதன் அடிப்படையில் விவாகரத்து கோரவும் ஒப்பந்த அடிப்படையில் செய்து கொள்ளப்பட்ட எந்த திருமணமும் விவாகரத்து வழங்குவதற்கான சட்டத்திற்கு இதுவரை அங்கீகாரம் பெறவில்லை எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றிருக்கக் கூடாது எனவும் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் தங்களுக்குள்ளான தீர்வை வேறு இடத்தில் தேடிக் கொள்ள அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Live in relationship not accept marriage Kerala court order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->