தண்ணீரில் குதித்து நடக்கும் பல்லி.. வைரலாகும் வீடியோவால் ஆச்சர்யம்.!
lizard walk on water
பல்லி ஒன்று தண்ணீரின் மேல் நடந்து செல்கின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரியான சுசாந்தா என்ற நபர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோவில் நீர்நிலை ஒன்று இருக்கிறது.
அதில் ஒரு பல்லி மரக்கிளையில் இருந்து குதிக்கிறது. அதன் பின் தொடர்ந்து அந்த பலியானது நீரில் வேகமாக நடந்து கரையை அடைகிறது. நீரில் மூழ்காமல் தண்ணீரில் அந்த பல்லி நடந்து செல்கின்றது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதால் இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து அந்த அதிகாரி சுசாந்தா அளித்துள்ள விளக்கத்தில், "நீர் மூலக்கூறுகள் ஆனது ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்கும்போது அதன் மேல் ஏற்படும் மேற்பரப்பு இழுவிசையினால் சிறிய விலங்குகள் தண்ணீரில் மூழ்காமல் நடக்க முடியும்." என்று தெரிவித்துள்ளார்.