டெபாசிட் காலியில் முதலிடம் எந்த கட்சி? - அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ், பாஜக!
Lok Sabha Elections 2024 Result Deposit
நடந்து முடிந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 240 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, தனது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.
99 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மக்களவை செல்ல உள்ளது. மேலும் மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக 37 இடங்களில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி இடம் பெற்றுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், ஜனதா தள் ஆகிய கட்சிகள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.
இந்த நிலையில், இந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 8,360 வேட்பாளர்களில், 7194 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளது தெரியவந்துள்ளது.
அதிகபட்சமாக பகுஜன் சமாஜ் கட்சி 476 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்துள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கட்சி 51 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் உள்ள கட்சிகளின் விவரம் பின்வருமாறு:
வஞ்சித் பகுஜன் அகாதி - 37
ஃபார்வர்டு பிளாக் - 33
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 30
பாரதிய ஜனதா - 28
இந்திய கம்யூனிஸ்ட் - 23
இந்திய குடியரசு கட்சி (அ) - 23
ஏஐஎம்ஐஎம் - 12
சமாஜ்வாதி - 10 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்துள்ளது.
மாநில அளவில் பார்த்தால் மகாராஷ்டிரா மாநிலத்தில் 1020 வேட்பாளர்கள் தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.
இரண்டாவது இடத்தில் தமிழகத்தில் 863 வேட்பாளர்கள் தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் 681 வேட்பாளர்கள் தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.
English Summary
Lok Sabha Elections 2024 Result Deposit