நாடாளுமன்றத்தில் தொடர் அமளி.! இரு அவைகளும் நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைப்பு.! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், கடந்த ஒன்றாம் தேதி மத்திய அரசு சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெறும். 

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அதானி குழும முறைகேடுகள் குறித்து விசாரணை செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையில் விசாரணைக்குழு ஒன்று அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. 

இதன் காரணமாக, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால் கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடியது. 

அப்போது நாடாளுமன்றத்தில், எல்ஐசி நிறுனம் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தது மற்றும் அரசு வங்கிகள் அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ள கடன்கள் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க வேண்டும், அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டன. 

இதனால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதிகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இருப்பினும், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் அவையை மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைத்தார். 

அதன் பின்னர், இருஅவைகளும் மதியம் இரண்டு மணிக்கு மேல் கூடியது. அப்போது எதிர்க்கட்சிகள் அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்துவதற்கு தொடர்ந்து வலியுறுத்தினர். 

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சியின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lok shaba adjourned tomarrow morning 11 o clock


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->