சட்டதிருத்தத்திற்கு எதிராக போராட்டம் - மதுபோதையில் லாரி ஓட்டுநர் செய்த விபரீதம்.!
lorry driver protest on stand mobile tower in punjab
கடந்த டிசம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் 3 புதிய சட்டங்கள் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய குற்றவியல் தண்டனை திருத்த சட்டத்திற்கு வாகன ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தேசிய அளவில் வாகன ஓட்டுநர்கள் கடந்த 2ம் தேதியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள, ஃபரித்கோட் மாவட்டத்தில் கோட் கபூரா பகுதியில் குல்விந்தர் சிங் என்ற லாரி ஓட்டுநர், புதிய குற்றவியல் தண்டனை திருத்த சட்டத்தை எதிர்த்து அங்குள்ள 250 அடி உயர மொபைல் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, ஓட்டுநர் குல்விந்தர் சிங்கை கீழே இறங்குமாறு தெரிவித்தனர். ஆனால், அவர் மதுபோதையில் இருந்ததால், உடனடியாக கீழே இறங்கிவர மறுத்துவிட்டார்.
இருப்பினும் போலீஸார் நீண்டநேரம் போராடி அவரை பாதுகாப்பாக கீழே இறக்கினர். பின்னர், போலீசார் குல்விந்தர் சிங்கை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
lorry driver protest on stand mobile tower in punjab