செங்கோட்டை | ஒரே நாளில் தாய் தந்தையை இழந்த மகனும் தற்கொலை! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம், செங்கோட்டை, மேலூர் செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (எ) துரை. இவரது மனைவி கல்யாணி.இவர்களுடைய மகன் சங்கர் (வயது 28). சங்கர் ஒரு கல் பட்டறையில் பணியற்றி வந்துள்ளார். 

சங்கரின் தந்தை மாயாண்டிக்கு, கடந்த 16 ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி கல்யாணி, மாயாண்டி சடலத்தின் மீது மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

இந்நிலையில், ஒரே நாளில் தாய் தந்தையை இழந்த சங்கர் துக்கம் தாங்காமல், செங்கோட்டை அருகில் இருக்கும் விஸ்வநாத புரம் கலங்காதகண்டி வாய்க்காலில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இந்த தகவல் அறிந்து செங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இது குறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரின் இழப்பினால் அவரது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lost parents son suicide issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->