காங்கிரஸ் தலைவர் திடீர் மாற்றம் - குழப்பத்தில் ம.பி அரசியல்.! - Seithipunal
Seithipunal


மத்தியபிரதேசம் மாநிலத்தில் 230 தொகுதிகளுக்கு கடந்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 163 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அபார வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 66 தொகுதிகளை கைப்பற்றி தோல்வியடைந்தது.

இதனால், மத்தியபிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து பாஜக ஆட்சியமைத்த நிலையில் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்றார். 

இந்த நிலையில், மத்தியபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கமல்நாத் இன்று நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அம்மாநிலத்தின் புதிய காங்கிரஸ் தலைவராக ஜிது பட்வாரி நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த தலைவர் மாற்றத்தால் அம்மாநிலத்தில் கட்சி ரீதியில் பல்வேறு மாற்றங்கள் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜீத்து பட்வாரி கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அம்மாநிலத்தின் உயர்கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madhya pradesh congrass leader change


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->