முஸ்லிம் காவலர்கள் தாடி வைக்க தடையா? - அதிரடி உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை.!
maduri high court order muslim police beard case
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முதல்நிலை காவலரான அப்துல் காதர் இப்ராஹிம், கடந்த 2018ம் ஆண்டு தாடி வைத்திருந்ததால் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து காவலர் அப்துல் காதர் இப்ராஹிம், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கெளரி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, "இறைத்தூதர் நபிகளை பின்பற்றும் இஸ்லாமியர்கள் வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பது வழக்கம். பல மதங்கள், இனங்களை கொண்ட இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு.
தமிழக காவல்துறையில் பணியாற்றும் முஸ்லிம் காவலர் தாடி வைக்க தடையில்லை. அவர்கள் நேர்த்தியாக தாடி வைத்து கொள்ள அனுமதி உண்டு. காவல் சட்ட விதிகளில் இதற்கு அனுமதி இருக்கிறது. ஆகவே, நிறுத்தி வைக்கப்பட்ட ஊதிய உயர்வு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
English Summary
maduri high court order muslim police beard case