100 கிலோ லட்டுக்கு ஆர்டர் கொடுத்துள்ள மத்தியபிரதேச காங்கிரஸ்..! - Seithipunal
Seithipunal


தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் இன்று மாலை 6 மணிக்குப் பிறகு தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் தொடங்கவுள்ள. இதையடுத்து ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.

மத்தியில் ஆட்சியமைக்கப்போகும் கட்சிக்கான இந்த தேர்தல் முடிவுக்காக நாட்டுமக்கள் மட்டுமல்லாது அனைத்து அரசியல் கட்சிகளும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். ஒரு பக்கம் ஆளும் பாஜக தலைமையிலான NDA கூட்டணி நாங்கள் தான் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்று கூறி வருகின்றனர். 

மற்றொரு பக்கம் காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணிக் கட்சிகள் தாங்கள் தான் இந்தமுறை ஜெயிப்போம் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் மத்தியபிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜிதேந்திர பட்வாரி என்பவர் 100 கிலோ லட்டுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. 

மேலும் மத்தியபிரதேச காங்கிரசார் இதுகுறித்து கூறுகையில், "இந்த பாஜகவால் வெற்றியை கொண்டாட முடியாது. மத்தியபிரதேசத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் காங்கிரஸ் தான் வெற்றி பெறும். மக்கள் இந்த அரசை மாற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர்" என்று கூறியுள்ளனர்.

எப்படியோ ஜூன் 4ம் தேதி யார் ஜெயித்து ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்று தெரிந்து விடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madya Pradesh Congress Gave Order For 100 Kg Ladoos


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->