ஜூனியர் மாணவர்களை முட்டி போட வைத்து.. சீனியர் அரங்கேற்றிய கொடூர செயலால் பரபரப்பு.!
Maharashtra college students get harassed in ncc camp
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் சீனியர் மாணவன் ஜூனியர் மாணவர்களை சேற்றில் முட்டி போட வைத்து கைகளை பின்னால் வைக்க சொல்லி ஒரு தடியை வைத்து அவர்களை அடித்துள்ளான்.
என்சிசி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டபோது தான் இந்த மோசமான செயல் அரங்கேறியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட 4 மாணவர்களையும் என்சிசி பயிற்சி மைதானத்தில் இருக்கும் ஒரு சேரான இடத்தில் முட்டி போட வைத்து அந்த சீனியர் மாணவர் இப்படிப்பட்ட இழிவான செயலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதை தொடர்ந்து இந்த குற்ற செயலில் ஈடுபட்ட சீனியர் மாணவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட கல்லூரியின் முதல்வரான சுசித்ரா நாயக் பேசிய போது, "இதற்கு முன் இப்படி ஒரு மோசமான சம்பவம் எங்கள் கல்லூரியில் நடந்தது இல்லை.
அந்த மாணவர்களை அடித்தது எங்கள் கல்லூரியை சேர்ந்த மாணவர் இல்லை. எங்களுடைய நிர்வாகத்தில் இருக்கின்ற வேறொரு கல்லூரியில் படிக்கின்ற மாணவர். இந்த சம்பவம் பற்றி விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது."எனக் கூறியுள்ளார்.
English Summary
Maharashtra college students get harassed in ncc camp