அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை - மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தகவல்! - Seithipunal
Seithipunal


ஆகஸ்ட் 15 சுதந்திர நாள் முதல் மகாராஷ்டிரா பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தனஞ்சி சாவந்த் அறிவித்துள்ளார். 

அமைச்சரவை கூட்டம் மகாராஷ்டிராவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பேசிய மகாராஷ்டிரா மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், ''மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை மற்றும் மருத்துவம் மக்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மாநில அரசு இதற்கான தொகையை வழங்கும். கிராமப்புற மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், மகளிர் மருத்துவம், மாவட்ட பொது மருத்துவமனைகள், பல்நோக்கு மருத்துவமனைகள் உள்ளிட்ட மருத்துவமனைகளிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்''
என்று குறிப்பிட்டுள்ளார். 

ஆண்டுக்கு 2.55 கோடி மக்கள் மகாராஷ்டிரத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மாநிலத்தில் 2,418 செயல்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra government hospital free treatment


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->