3 மாத குழந்தையுடன் சட்டப்பேரவைக்கு வந்த பெண் எம்.எல்.ஏ.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்திற்கு தன்னுடைய குழந்தையுடன் பெண் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகின்றது. இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தேவ்லாலி தொகுதி எம்.எல்.ஏ-வான சரோஜ் பாபு லால் அகிரே என்ற பெண் தன்னுடைய மூன்று மாத குழந்தையுடன் வந்து கலந்து கொண்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் தான் சரோஜ்க்கு குழந்தை பிறந்துள்ளது. அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, "கொரோனா வைரஸினால் கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே நாக்பூரில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கவில்லை. 

இதற்கிடையில் நான் தாயாகி இருக்கிறேன். ஆனால், எனக்கு வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்வது எனது கடமை. அதற்காகத்தான் வந்துள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra women MLA visit With her baby


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->