மகாராஷ்டிராவின் ஒரே காங்கிரஸ் எம்.பி சுரேஷ் நாராயணன் தனோர்கர் மறைவு: தலைவர்கள் இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவின் ஒரே காங்கிரஸ் எம்.பி சுரேஷ் நாராயணன் தனோர்கர் மறைவு: தலைவர்கள் இரங்கல்.!!

மக்களவைக்கு மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு தலைவர் சுரேஷ் நாராயணன் தனோர்கர். இவர் கடந்த வாரம் சிறுநீரக கற்களை நீக்கும் சிகிச்சைக்காக நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுடெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சுரேஷ் நாராயணன் தனோர்கர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான வரோராவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

கடந்த சனிக்கிழமை தனோர்கரின் தந்தை காலமான நிலையில், அடுத்த ஓரிரு தினங்களில் தனோர்கரும் காலமானது அவரது குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இன்று இயற்கை எய்திய மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் நாராயணன் தானோர்கர் அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharastra congrass mp suresh narayanan dhanokar rest in piece


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->