மகாராஷ்டிரா || தீபாவளி சிறப்பு பரிசு.! அரசாணை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


மராட்டிய மாநிலத்தில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பை அளிப்பதற்கு மாநில அரசு ஆலோசனை செய்து வந்தது.

இதற்காக, மும்பையில் ஆலோசனை நடத்திய மாநில அமைச்சரவை, ரூ.100க்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க முடிவு செய்தது. இந்த தொகுப்பில் ஒரு கிலோ ரவை, நிலக்கடலை, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "மாநிலத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் 1.50 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு பரிசுத் தொகுப்பை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள 1.5 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு வழங்க மாநில அரசு ரூ.513 கோடி ஒதுக்கியுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அம்மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல், மும்பை மாநகராட்சி தேர்தல் உள்ளிட்டவை வரிசையாக வரவுள்ளதால் இதனைக் கருத்தில் கொண்டே மாநில அரசு குடும்ப அட்டை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharastra deepaavali special price for family card


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->