உலகக்கோப்பை வெற்றி - இந்திய அணிக்கு 11 கோடி ரூபாய் பரிசு அறிவித்த மகாராஷ்டிரா அரசு.!
maharastra govt announce 11 crores price to indian cricket team for world cup championship
ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதையடுத்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா டி20 உலகக் கோப்பை வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார். இதேபோல், உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று இந்திய அணி வீரர்கள் மும்பையில் திறந்த பேருந்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன்பின்னர் வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில், உலகக் கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
English Summary
maharastra govt announce 11 crores price to indian cricket team for world cup championship