பக்கவாதம், உயிரிழப்பு நேரிடலாம்! மகாராஷ்டிராவில் கில்லியன் பேர் சிண்ட்ரோம் பாதிப்பு!
Maharastra Guillain Barré Syndrome issue
மகாராஷ்டிராவில் கில்லியன் பேர் சிண்ட்ரோம் (Guillain-Barré Syndrome - GBS) பாதிப்பால் ஒருவர் உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
புனேவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. சோலாப்பூரில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஐந்து நாட்கள் சிகிச்சைக்குப் பின் உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் GBS ஆக இருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
GBS (Guillain-Barré Syndrome) என்றால் என்ன?
GBS என்பது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு, தவறுதலாக நரம்புகளைத் தாக்கும் ஒரு அரிய ஆட்டோ இம்யூன் நோயாகும். இதனால் கை, கால் தசைகள் வலுவிழந்து, நடக்க முடியாமல் போகலாம். சிலருக்கு குதிங்காலில் வலி தொடங்கி உடல் முழுவதும் பரவும்.
இதய துடிப்பு, ரத்த அழுத்தம், ஜீரண மண்டலம் கூட பாதிக்கப்படலாம். புனேவில் கடந்த ஒரு வாரத்தில் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 14 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொற்று நோயா?
இது தொற்று நோய் அல்ல. கேபிலோக்பாக்டர் ஜெஜூனி என்ற பாக்டீரியா தொற்று, டெங்கு, ஜிகா வைரஸ், தடுப்பூசி அல்லது அறுவை சிகிச்சை காரணமாகவும் GBS ஏற்படலாம்.
என்ன பாதிப்பு ஏற்படும்?
சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் உயிரிழப்பு நேரிடலாம். 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நோய் முற்றினால் பக்கவாதம், நுரையீரல் செயலிழப்பு ஏற்படலாம்.
பெரும்பாலானோர் சில வாரங்களில் குணமடைந்தாலும், சிலருக்கு ஓராண்டு வரை பாதிப்பு நீடிக்கலாம். புனேவில் அதிகரித்துவரும் பாதிப்புகளை அடுத்து, சிறப்பு மருத்துவ குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் ஐசிஎம்ஆர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
English Summary
Maharastra Guillain Barré Syndrome issue