மராட்டியத்துக்கு புதிய கவர்னர் வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்.!
maharstra congrass strike for governor change
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, சத்ரபதி சிவாஜியைப் பற்றி பேசியது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கவர்னருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
மேலும், அவர்கள் அனைவரும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளனர். இதேபோன்று நேற்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பகத்சிங்கோஷ்யாரியை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, நான்தெட்டில் முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கவர்னருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது, பகத்சிங்கோஷ்யாரியை மாநிலத்தைவிட்டு வெளியேற்றிவிட்டு மஹாராஷ்டிராவிற்கு புதிய கவர்னரை நியமிக்க வேண்டும் என்று அசோக் சவான் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது:- "கவர்னரின் பேச்சு பொது மக்களின் கோபம் இன்னும் அதிகமாகி உள்ளது. இது ஒரு தனிப்பட்ட கட்சி சார்ந்தது அல்ல, நாட்டின் பெருமையை சார்ந்தது. கவர்னர், இதுபோன்ற சர்ச்சைகுரிய கருத்துகளை கவர்னர் கூறுவது இது முதல் முறையல்ல.
பகத்சிங்கோஷ்யாரி கண்டிப்பாக மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். மாநிலத்துக்கு புதிய கவர்னரை நியமிக்க வேண்டும். மராட்டியம் அவமதிக்கப்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
maharstra congrass strike for governor change