மகாத்மா காந்தியின் அமைதி மற்றும் மதநல்லிணக்கம் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது- ஜெய்சங்கர் கருத்து! - Seithipunal
Seithipunal


மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளார். இந்தியாவின் பன்னாட்டு உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் மேற்கொண்ட இந்த பயணத்தின் ஒரு பகுதியாக முதலில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அங்கு அவருக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆஸ்திரேலியாவில், இந்திய வம்சாவளியினருடனான ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜெய்சங்கர், வளர்ச்சிப் பாதையில் தன்னை நிலைநிறுத்தி வரும் இந்தியா, சர்வதேச ரீதியில் பல்வேறு நாடுகளுடனும் ஒருங்கிணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார். உலக நாடுகளிடையே இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த விருப்பம் உள்ளது, மேலும், சர்வதேச அமைப்புகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நல்லெண்ணமும் உண்மையான விருப்பமும் பல நாடுகளில் காணப்படுவதாக அவர் கூறினார்.

பின்னர், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரிஸ்பேன் நகரின் ரோமா சாலை பார்க்லேண்ட்ஸில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் உருவச்சிலை முன்னிலையில் நின்று அவரது கைத்தியக்கம், மதநல்லிணக்கம் மற்றும் அமைதி தொடர்பான நெறிமுறைகள் உலக மக்கள் மத்தியில் எப்படி பரவலாக கொண்டாடப்படுகின்றன என்பதையும் ஜெய்சங்கர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இதனை அவர் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவு செய்யும் போது, "மகாத்மா காந்தியின் அமைதி மற்றும் மதநல்லிணக்க செய்தி உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது" எனக் குறிப்பிட்டார்.

இந்த பயணத்தின் இரண்டாம் பகுதியாக ஜெய்சங்கர் சிங்கப்பூருக்கும் செல்வார், அங்கு சிங்கப்பூர் அரசு அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடல்கள் நடத்துவதற்கும், இருநாட்டுகளின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahatma Gandhi Peace and Religious Harmony Resonates Around the World Jaishankar Says


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->