ராகுல் காந்தியுடன் கைகோர்த்த மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன்! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியின் பாரத் ஒற்றுமை யாத்திரையில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி பங்கேற்றார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் யாத்திரை பயணம் தற்பொழுது மகாராஷ்டிராவை அடைந்துள்ளது. கடந்த நவம்பர் 7ஆம் தேதி மகாராஷ்டிராவிற்குள் நுழைந்த இந்த யாத்திரையில் காங்கிரசின் கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இன்று காலை 6 மணிக்கு அகோலா மாவட்டத்தில் உள்ள பாலாப்பூர் என்ற இடத்தில் ராகுல் காந்தி தனது யாத்திரை பயணத்தை தொடங்கினார். அவர் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஷேகோவான் என்ற இடத்தை வந்தடையும் போது மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி ராகுலுடன் யாத்திரையில் கலந்து கொண்டார். 

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பாரத யாத்திரையில் துஷார் காந்தி பங்கேற்றது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேரனான ராகுல் காந்தியும் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனான துபாய் காந்தியும் பாரம்பரியத்தை தொடர்கின்றனர். ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள ஆட்சியாளர்களுக்கு அவர்களின் முயற்சியை இந்திய மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்ற செய்தியை அனுப்பியுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahatma Gandhis great grandson joined hands with Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->