மதுபிரியர்களால் பெண்களுக்கு வாழ்வாதாரம் முன்னேற்றம்...! - Seithipunal
Seithipunal


பீகார் மாநில அரசு வீணடிக்கப்படும் காலி மது பாட்டில்களைக் கொண்டு கண்ணாடி வளையல்களை உருவாக்குவதற்கான பயிற்சி அளிப்பதன் மூலம் ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த உள்ளது.

இது குறித்து மாநில மது விலக்குத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் மது பாட்டில்கள் கைப்பற்றப்படுகின்றன. அவற்றை அப்புறப்படுத்துவதில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இயந்திரங்கள் மூலம் அவற்றை அழிக்கும் போது அதிக அளவில் கழிவு உருவாகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையி்ல் ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு கண்ணாடி வளையல்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருளாக தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, ஊரகத்துறை அமைச்சர் ஷ்ரவன் குமார் தெரிவித்ததாவது: ஏழை பெண்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வரும் "ஜீவிகா" அமைப்பின் தொழிலாளர்கள் மூலம் எல்இடி பல்ப் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் பொருளதார ரீதியாக தன்னிறைவு அடைந்துள்ளனர். அடுத்த கட்டமாக தற்போது நொறுக்கப்பட்ட மது பாட்டில்கள் மூலம் கண்ணாடி வளையல் தயாரிக்கும் மூலப்பொருளாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

துவக்கத்தில் இவை குறைவாக இருந்தாலும் வரும் காலங்களில் அவை அதிகரிக்கப்படும். இவை குடிசை தொழிலாக செயல்படும். இதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டம் தலைநகர் பாட்னாவில் இருந்து துவங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று ஊரகத்துறை  அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Make glass bracelets wine bottles


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->