மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அறியப்படும் மோகன் லால் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் ஆசிர்வாத் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் த்ரிஷியம், புலி முருகன், லூசிஃபர், மரைக்காயர் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மோகன்லாலின் நெருங்கிய நண்பரான அந்தோணி பெரும்பாவூர் என்பவர் மோகன்லாலின் கார் ஓட்டுனராக இருந்து தற்போது பிரபல திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார்.

இந்த நிலையில் மோகன்லாலுக்கும் அந்தோணி பெரும்பாவூருக்கும் இடையே பணப்பரிவர்த்தனை மற்றும் லாப பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விவகங்கள் குறித்து வருமானவரித் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வருமானவரித்துறையினர் மோகன்லாலின் வீட்டில் சோதனை நடத்தியதோடு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

அந்தோணியின் வெளிநாட்டு வங்கி கணக்குகள், பண பரிவர்த்தனைகள் குறித்து வருமானவரித்துறை ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆய்வில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தான தகவலை வருமானவரித்துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Malayalam actor Mohan Lal house raided by Income Tax department


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->