நான் எங்கும் ஓடி ஒளியவில்லை... கேரள சினிமாவை தகர்த்து விட வேண்டாம் - நடிகர் மோகன்லால் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றி கலந்து கொண்ட நடிகர் மோகன்லால், கேரள திரையுலகை உலுக்கிய பாலியல் புகார்கள் தொடர்பாக விளக்கம் அளித்தார். 

அதில், நான் இங்கே தான் இருக்கிறேன், எங்கும் ஓடி ஒளியவில்லை. அம்மா சங்கத்தில் நான் 2 முறை பொறுப்பில் இருந்துள்ளேன். புகார் குறித்து விசாரிக்க போலீஸ் உள்ளது. அனைவரும் பொறுமை காக்க வேண்டும்.

ஹேமா குழு அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டியது ஒட்டுமொத்த கேரள திரையுலகமும் தான். மலையாள நடிகர் சங்கம் சிறப்பாக செயல்பட்டது. அதன் மீது அவதூறு பரப்ப வேண்டாம்.

பாலியல் புகார்களால் பெருமை மிகுந்த கேரள சினிமா சிதைந்து போவதை நினைத்து கவலை கொள்கிறேன். பாலியல் குற்றச்சாட்டுகளால் கேரள நடிகர் சங்கம் சிதறி விடக்கூடாது.

குழு கலைக்கப்பட்டாலும் சங்கத்தின் செயல்பாடுகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை, பணிகள் தொடர்கிறது.பாலியல் புகார்கள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Malayalam Cinema Complaint Mohanlal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->