ஏழை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை பறித்ததால் உங்களுக்கு என்ன பலன்? - மல்லிகார்ஜுனே கார்கே.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளிட்ட பிரிவுகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நிறுத்தி உள்ளது. 

இதற்காக பிறப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் இலவச, கட்டாய கல்வி அளிப்பது அரசின் தலையாய கடமை.

ஆகவே, 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள்தான் இனி மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் மற்றும் பழங்குடியினர் அமைச்சகத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் வருவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை அனைத்து எதிர்க்கட்சிகளும் சாடி வருகின்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் கடுமையாக சாடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:- 

"பிரதமர் மோடி அவர்களே, 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கிற தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை தற்போது உங்கள் அரசு நிறுத்தியுள்ளது. 

ஏழை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை பறித்ததால் உங்களுக்கு என்ன பலன்? ஏழை மாணவர்களுக்கான இந்த கல்வி உதவித்தொகையை பறிப்பதன் மூலம் உங்கள் அரசு எவ்வளவு சம்பாதித்து விடும் இல்லை சேமித்து விடும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mallikarjune karkhe speach sheduled students education scholarship stop


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->