கவர்னர் பதவியை இழிவுபடுத்த பாஜக திட்டமிடுகிறது - மல்லிகார்ஜுனே கார்கே.! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபைக் கூட்டம் கடந்த ஒன்பதாம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது சட்டசபையில் உரையாற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்துள்ளார். 

இதனைக் கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் வாசித்துக் கொண்டிருந்த போது, திடீரென கவர்னர் வெளியே சென்றார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:- 

"இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள கவர்னர்களை கட்சி ஊழியர்களாக பயன்படுத்தி, அந்த பதவியை இழிவுபடுதுவதற்காக பா.ஜனதா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்த செயல் ஜனநாயகத்தின் மீதான ஒருவிதமான தாக்குதல். 

சமீபத்தில், சில மாநிலங்களின் கவர்னர்கள் அரசியல் சட்டத்தை மீறியது, இந்திய அரசியலின் கூட்டாட்சி முறையின் பெருமையை சீர்குலைத்துள்ளது. கவர்னர்களும், அரசியல் சட்ட கட்டமைப்புக்குள் செயல்பட வேண்டும். அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கும் சட்டசபையை இழிவுபடுத்தக்கூடாது. 

பாஜக இல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சமூக மற்றும் அரசியல் பதற்றத்தை ஏற்படுதுவதற்கு கவர்னர்களை அவர்களின் டெல்லி எஜமானர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இது ஆபத்தான ஒன்று" என்று அவர் தெரிவித்து உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mallikarjune kharkhe speach for bjp plan denigrate to governor position


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->