பிரதமர் மோடியின் அரசியல் மீது மக்களுக்கு உள்ள நம்பகத்தன்மை குறைந்துவிட்டது - கார்கே விளாசல்! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாசல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவில், திமுக வேட்பாளர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று உள்ளார். 

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வெற்றி பெற்றுள்ளது. ஹிமாச்சல் பிரதேசம், டேஹ்ரா மற்றும் ஹமிர்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நலகர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 

பீகார் மாநிலம், ரூபாலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றிபெற்று உள்ளார். மத்திய பிரதேஷ் அமர்வாரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.  மேற்குவங்க மாநிலத்தில் ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா இந்த நான்கு தொகுதிகளிலும் திரிணாமுல்  காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மொத்தமாக இந்த 13 சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ், ஆம் ஆத்மீ, திரிணாமுல் என இண்டி கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

இந்த தேர்தல் முடிவு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு சாதகமான முடிவுகளை வாக்குகள் மூலம் பெற்று கொடுத்து மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இக்கட்டான சூழ்நிலைகளில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு கடுமையாக உழைத்த தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி.பாஜகவின் ஆணவத்தையும், தவறான நிர்வாகத்தையும், வெறுப்பு அரசியலையும் பொதுமக்கள் முற்றாக நிராகரித்துள்ளதையே இந்த இடைத்தேர்தல் வெற்றி நிரூபணமாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் மீது மக்களுக்கு உள்ள நம்பகத்தன்மை குறைந்து வருவதற்கு இந்த வெற்றிகள் சான்று” என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MallikarjunKharge say about Assembly ByElection Result july 2024


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->